ஓமந்தையில் குளம் உடைப்பு: 82 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை!

tamil lk news


 ஓமந்தை - பாலமோட்டை பகுதியில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் உடைப்பெடுத்தமையால் அந்தக் குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது.


அத்தோடு, வவுனியாவில் (Vavuniya) தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அந்தப் பகுதிக்கான வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.


குறித்த குளமானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்துள்ளதுடன், விவசாயிகளே சிறிய திருத்த வேலைகளை கடந்த காலத்தில் செய்திருந்தனர்.




தற்போது குளம் உடைப்பெடுத்து பாய்ந்து வருவதனால் அதன் கீழான நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.




குறித்த குளத்தின் உடைப்பை கட்டுப்படுத்த இராணுவத்தினர் கமக்கார அமைப்பினருடன் இணைந்து முயற்சி செய்த போதும் அது பயனளிக்காத நிலையில் தற்போது தண்ணீர் தொடர்ந்தும் வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்