மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு !

 

tamil lk news

காலி, பெந்தோட்டை, ரஜமாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து இன்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


28 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


Girl in a jacket கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை....! வெளியான அறிவித்தல்


மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்