ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சு எடுத்த நடவடிக்கை!

 

tamil lk news

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம் தொடர்பான தீர்மானங்களை எடுத்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் தேவைகளை நிர்ணயம் செய்யும் பணியும் இந்த சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், சுயாதீன அமைப்பாக செயற்படும் இந்த சபையின் அமைப்பு தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த சபை நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல ஆண்டுகளாக நிலவி வரும் ஆசிரியர் சம்பள ஏற்றத்தாழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கு கணக்கிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு இந்த சபையை நிறுவிய பின் வழங்கப்படும்.


அத்துடன், முரண்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள வரவு செலவுத் திட்ட யோசனையில் உள்ளடக்கப்படும்.




1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் இந்த ஆசிரியர் சபை அமைக்கப்படுகிறது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்