48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு ; பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

tamil lk news


 வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது.


எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதேவேளை இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று மாலை வேளையில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.




Previous Post Next Post