கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து; பெண் உயிரிழப்பு!

 

tamil lk news

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.


இன்றைய தினம் (26) அதிகாலை இந்த விபத்து புனேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியில் வழுக்கும் நிலைமை காணப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா (Vavuniya) பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




விபத்து சம்பவம் தொடர்பில் புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ,உயிரிழந்த பெண்ணின் விபரம் வெளியாகவில்லை.

tamil lk news


tamil lk news




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்