வவுனியாவில் வெள்ள நிலவரம் குறித்து அவசர கூட்டம்

 

tamil lk news

வவுனியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 




குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன், செ.திலகநாதன்  ப.சத்தியலிங்கம் , மற்றும்  மாவட்ட செயலாளர்  பி.எ.சரதசந்திர, பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பொலிசார், இராணுவத் தரப்பு உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்