அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

tamil lk news

மல்வத்து ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதேவேளை, நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று (29) முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 




திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்