நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

 

tamil lk news

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.


குறித்த வர்த்தமானியானது, 2024.11.12 இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.


அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதற்கமைய, பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்