வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்து தற்காலிகமாக தடை!

 

tamil lk news

வட்டுவாகல் பாலத்தின் போக்குவரத்து தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தற்போது தெரிவித்துள்ளது.


முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.


மீண்டும் தாெடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக மீண்டும் வட்டுவாகல் பாலம் ஆங்காங்கே நீரினால் பாலத்தினை குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் இருக்கின்றது.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்