திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்....!

 

tamil lk news

தற்போது நிலவி வரும் சீரற்ற காலை நிலை காரணமாக தம்பலகாமம் சந்தியின் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. 


இச்சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.


இதன்போது, போக்குவரத்து ஒரு சில மணிநேரம் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டுள்ளது.




இதனை அடுத்து, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபை, தம்பலகாமம் பொலிஸார், இராணுவத்தினர்கள் இணைந்து குறித்த மரத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்