வவுனியாவில் பாம்பு கடித்து பரிதாபமாக இளைஞன் மரணம்...!

 வவுனியா (Vavuniya) வடக்கு- நெடுங்கேணி பகுதியில் பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.


இந்த சம்பவமானது பட்டிக்குடியிருப்பில் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.


tamil lk news


சம்பவத்தில், குறித்த பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் பாம்பு கடிக்கு உள்ளாகிய நிலையில் நெடுங்கணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளர்.




தற்போது சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையடுத்து பாம்பு மற்றும் விச பூச்சிகள் நீரில் அகப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Vavuniya News)



Previous Post Next Post