திருகோணமலையில் கன மழையினால் இடிந்து விழுந்த பல்நோக்கு கட்டடம்

tamil lk news


 திருகோணமலை (Trincomalee) - வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டிடம் கன மழையினால் இடிந்து, விழுந்து சேதமடைந்துள்ளது.


இந்த சம்பவமானது நேற்று (26) சின்னம்பிள்ளைச்சேனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.


 இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி, முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய பகுதியும் எந்த நேரமும் விழுந்து விடக்கூடிய, ஆபத்தான நிலையில் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

tamil lk news


கட்டடத்தின் மீதி பகுதியும் ஆபத்தான நிலையில் இருப்பதால், எவரும் இந்தக் கட்டடத்துக்குள், உட்பிரவேசிக்க வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.



பிரதேச சுகாதாரப் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த கட்டிடத்தில் கிராம சேவகர் அலுவலகம், பிரதேச மாதர் அபிவிருத்தி நிலையம், குடிசை கைத்தொழில் பயிற்சி நிலையம், பிரதேச கடற்றொழில் சங்க அலுவலகம் ஆகியன இயங்கி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்