அரசியல் ஆர்வலரும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகருமான அன்ரன் பாலசிங்கத்தின் (Anton Balasingham) 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளியவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம் (14.12.2024) மாலை சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் போராளி போசன் மற்றும் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்கள் பல இடங்களிலும் நடைபெற்றிருந்தது.
தமிழ்தேசத்தின் அரசியலின் முக்கிய பங்காளரான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் பருத்தித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (14.12.2024) ஜனநாயக போராளிகள் கட்சியினரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.



