வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் போட்டி போட்டு மீன் பிடிக்கும் மக்கள்!

tamil lk news


 வவுனியா (Vavuniya) குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.


வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக பல குளங்கள் வான் பாய்ந்து வருகின்றது. 


அதில் வவுனியா நகரையண்டியுள்ள பிரதான குளமான வவுனியா குளமும் வான் பாய்ந்து வருகின்றது. 



குறித்த வான் பாயும் நீருடன் குளத்து மீனும் பெருமளவில் வருவதால் நுளம்பு வலை, மீன் வலை, துணி, வேட்டி  என்பவற்றை கொண்டு வான் பார்க்க வரும் மக்களும் மீன்களை போட்டி போட்டு பிடிப்பதை அவதானிக்க முடிகிறது.

tamil lk news


இதன்பேது சிலாப்பியா, யப்பான், விரால், கெளிறு போன்ற பெருமளவான மீன்கள் பிடிக்கப்படுவதுடன், அதனை பிடித்துச் செல்பவர்கள் மகிழச்சியல் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.


 

Previous Post Next Post