சொத்துக்களை இழக்கப் போகும் பில்கேட்ஸ் - எலான் மஸ்க் எச்சரிக்கை!

 

tamil lk news

 டெஸ்லா நிறுவனமானது உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும் என அந்நிறுவனத்தின் நிறுவர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


டொனால்ட் ட்ரம்ப் ஆதரவால் தற்போது அமெரிக்க அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எலான் மஸ்க், பில் கேட்ஸை தனது கருத்துக்களால் சீண்டி வருகின்றார்.


இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,


 டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார்.



 ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்' என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.


டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார்.


 பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விடயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் பொசிஷன் ஆகும்.


 டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டொலரை இழந்ததாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார்.


இதன்படி டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது பில் கேட்ஸ் - கு அதிக லாபத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்