சதொச விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த திருடர்கள் குழுவொன்று

tamil lk news

 

தம்புள்ளை(Dambulla) நகரில் அமைந்துள்ள லங்கா சதொச விற்பனை  நிலையத்திற்குள் நேற்று இரவு திருடர்கள் குழுவொன்று உள்நுழைந்துள்ளனர்.


இதன்போது, பால் மா உள்ளிட்ட பல பொருட்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  


குறித்த சதொச விற்பனை நிலைய வளாகத்திற்குள் உள்ள மா மரத்தில் ஏறி, விற்பனை நிலையத்திற்கு கூரையை உடைத்து அவர்கள் உள்ளே சென்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்