வவுனியா - ஒமந்தையில் சீமேந்துகளை ஏற்றிச் சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து

  

tamil lk news

வவுனியா (Vavuniya)  ஒமந்தை பணிக்கர்நீராவியில் இன்று (02) சீமேந்துகளை ஏற்றி சென்ற லொறி குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமேந்துகளை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. 



இவ்விபத்தில் லொறியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

vavuniya news





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்