நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு! Srilanka Tamil News

tamil News

  Srilanka Tamil News

tamil lk news

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளது. 


77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. 


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். 



அத்துடன், இந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பில் எந்த கவச வாகனங்களும் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 



அத்துடன், அத்தியாவசியமான செயற்பாடுகளுக்கு மாத்திரம் வரையறுத்து, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து, இம்முறை சுதந்திர தின விழா இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்