Srilanka Tamil News
பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுச்சர்களை விநியோகிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொடுப்பனவை
உதவிக் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபாய் கொடுப்பனவை எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.