Srilanka News Tamil
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,தாதியர்களின் பதவி உயர்வு காலம் நீடிக்கப்பட்டுள்ளமை சுகாதார ஊழியர்களை முழுமையான பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை (27) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு, அரசாங்காம் இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை நடத்த அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
Jaffna News Tamil