சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கின் சேட்டை - Srilanka News Tamil

 Srilanka News Tamil 

சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கின் சேட்டை - Srilanka News Tamil-Sri Lankan monkey prank makes international headlines - Srilanka News Tamil


 எதிர்பாராத ஒரு குற்றவாளி - ஒரு குரங்கு - நாடு தழுவிய மின்வெட்டை ஏற்படுத்தி, முழு நாட்டையும் இருளில் ஆழ்த்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு, நேற்றையதினம் சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.



சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கின் சேட்டை - Srilanka News Tamil-Sri Lankan monkey prank makes international headlines - Srilanka News Tamil

நேற்று காலை காலை 11:30 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது, 


ஆரம்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு என்று கருதப்பட்ட இந்த சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.


மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர், படிப்படியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் திரும்பியது. 


இந்த மின் தடையின் வினோதமான காரணம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது, 



குறித்த  இலங்கை குரங்கு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அதேநேரம், நுரைச்சோலை அனல் மின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்