Srilanka News Tamil
இலங்கையின் மூத்த நடிகை குமாரி பெரேரா தனது 68வது வயதில் காலமானார்.
கோபி கடேவின் முதல் எபிசோடில் மகளின் வேடத்தில் அவர் நடித்தார், அதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.
காபி ஷாப், கண்டே கெதரா, சித்தமதுரா, லோகு ஐயா போன்ற ஏராளமான தொலைக்காட்சி நாடகங்களில் அவர் பங்களித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அவரது இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை.
குமாரி பெரேராவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர.
