யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

  Srilanka News Tamil

யாழ்ப்பாணம்(Srilanka) போதனா வைத்தியசாலையில் 5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.


 கிளிநொச்சி - தர்மபுரம்,  உழவனூர் பகுதியை சேர்ந்த 56 வயதடைய  நடராசா இன்பராசா  என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில்  காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குடும்பஸ்தர்/Family member dies of fever at Jaffna Teaching Hospital


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த குடும்பஸ்தருக்கு கடந்த 19ஆம் திகதி இரவு காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெறுவதற்காக அடுத்தா நாள் காலை தர்மபுரம் வைத்தியசாலைக்கு சென்றார்.



மேலதிக சிகிச்சைக்காக அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Jaffna News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்