கிண்ணியாவில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம்

Srilanka News Tamil

 

கிண்ணியாவில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம்

கிண்ணியா தள வைத்தியசாலையில் துணை வைத்திய நிபுணர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்றையதினம்(18) ஈடுபட்டனர். 


இதன் காரணமாக, நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டு, ஏமாற்றத்துடன் வீடு சென்றதை அவதானிக்க முடிந்தது.


மாதாந்த கிளினிக்காக வந்த, நீரிழிவு நோயாளர்கள் மருந்துகள் எதுவும் வழங்கப்படாமையினால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர். 


அதேபோன்று வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும், மருந்துகள் இன்றி, வீடு சென்றனர். 



விடுதியில் இருந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களுக்கும் மருந்துகள் வழங்கப்படவில்லை. அதனால், அவர்களும் ஏமாற்றத்துடன் வீடு காணக்கூடியதாக இருந்தது.


சம்பளத்தை எவ்வளவுதான் அரசாங்கம் அதிகரித்தாலும், மக்கள் மீது அவர்கள் இரக்கம் காட்டுவதில்லை. மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இதைவிடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு மக்களை கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டாம். 



நாங்கள் ஏழைகள். பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து அவதிப்பட்டு கொண்டிருக்கின்றோம். ஆனால், அரசாங்கம் அவர்களுக்கு தொடர்ந்து சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 


இந்த நிலையில், அவர்கள் எங்களை இவ்வாறு சிரமத்துக்கு உள்ளாக்குவதில் எந்த நியாயமும் இல்லை என ஏமாற்றத்துடன் வீடு செல்கின்ற நோயாளிகள், தங்கள் விசனத்தை தெரிவித்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்