நாட்டில் பல இடங்களிலும் இன்று மழை ,மக்களே அவதானம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  Srilanka News Tamil

நாட்டில் பல இடங்களிலும் இன்று மழை ,மக்களே அவதானம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!


மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களிலும் ,காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்ட்டுள்ளது


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


மத்திய, சப்ரகமுவ, ‌மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை  மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 




காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை , மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில  இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது 


கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.  கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.




இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் 


எனவே பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டடுள்ளது

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்