சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி

  Srilanka News Tamil

சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி/Husband and wife found dead


பொகவந்தலாவை - தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


 குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து இந்த சடலங்கள் இன்று(16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



 38 வயதான சின்னையா விஜயகுமார் மற்றும் 37 வயதான பெருமாள் கௌரி என்ற இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இவ்வாறு வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்படும் போது, அவற்றின் அருகில் நஞ்சு போத்தல் ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


 சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும், கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்