அரச ஊழியர்களின் சம்பள உயர்வு; அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்

Srilanka News Tamil

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு; அமைச்சர் இன்று வெளியிட்ட  தகவல்-Minister releases salary hike for government employees today


  இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை ​பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது தாதியர்களின் சேவைகளுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் குறித்தும் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார். 

அடிப்படை சம்பளம்

இலங்கையில் சுமார் 8,200 தாதியர்கள் பணிபுரிகின்றனர். தாதியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 32,525 ரூபாய் ஆகும். அந்த தொகையை 54,920 ரூபாவாக அதிகரித்தோம்.



ஒரு மணி நேரத்திற்கு 215 ரூபாயாக இருந்த அவர்களின் மேலதிக நேர கொடுப்பனவவை 75 ரூபாய் அதிகரித்து 290 ரூபாயாக உயர்வடையும். 


1,084 ரூபாவாக இருந்த தினசரி சம்பளம் 1,831 ரூபாவாக அதிகரிக்கப்படுவதுடன், முதல் நியமனம் பெற்ற பிறகு 5 வருடங்கள் வேலை செய்பவர்கள் பற்றியே தெரிவிக்கிறேன்.


மேலும், ஏப்ரல் முதல் அவர்களுக்கு குறைந்தபட்ச மொத்த சம்பளம் 133,640 ஆகும். அதேநேரம் 9,400 இரண்டாம் நிலை தாதியர்கள் உள்ளனர்.


அவர்களின் அடிப்படை சம்பளம் 37,636 ரூபா. இது 64,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அடிப்படை சம்பளம் மட்டும் 26,864 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.



முன்பு ஒரு மணி நேரத்திற்கு ரூ.255 ஆக இருந்த OT கட்டணம் 90 ரூபாவாக அதிகரித்து 345 ரூபாவாக உயர்த்தப்படும். 


1881 ரூபாவாக இருந்த தினசரி கொடுப்பனவு 2150 ரூபாவாக உயர்த்தப்படும். பின்னர் அவர்களின் மொத்த சம்பளம் கணிசமாக அதிகரிக்கப்படும்.


முதல் வகுப்பில் 16,000 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களின் தற்போதைய அடிப்படை சம்பளம் 44,965ரூபா. இந்த அடிப்படை சம்பளம்  77,850 ரூபாவாக ஆக அதிகரிக்கப்படும்.


அதாவது அடிப்படை சம்பளத்தில் 32,885 அதிகரிக்கப்படும். இப்போது, ​​ஒரு மணி நேர OT 305 ரூபாயாக உள்ளது, இது 420 ரூபாயாக அதிகரிக்கும். 2248 ரூபாவாக இருந்த தினசரி கொடுப்பனவு  2595 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



இதேவேளை 6,000 உயர் தகுதி வாய்ந்த தாதியர்கள் தற்போது சேவையில் உள்ளனர். இந்த நபர்கள் 22 வருட சேவைக்குப் பிறகுதான் பதவி உயர்வு பெறுகிறார்கள். 


தற்போதைய அடிப்படை சம்பளம் 53,035 ரூபாவாகும் இது 92,460 ரூபாவாக உயரும். 


ரூ.350 செலவாகும் ஒரு OT மணி நேரம் ரூ.500 ஆகிறது.  2,651 ரூபாவாக இருந்த தினசரி உதவித்தொகை 3,082 ரூபாவாக அதிகரிக்கப்படும்.


மேலும், இலங்கையில் தற்போது சுமார் 415 சிறப்பு தர தாதியர்கள் உள்ளனர். 


சுமார் 27 வருட சேவைக்குப் பிறகு இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. இவர்களின் அடிப்படை சம்பளம்  54,235 ரூபாவாகும் இது  94,060 ரூபாவாக அதிகரிக்கப்படும்.


அவர்களுக்கான ஒரு மணி நேரத்திற்கு ரூ.395 ஆக இருக்கும் தொகை ரூ.545 ஆக அதிகரிக்கப்படுவதுடன் தினசரி கொடுப்பனவு  2,711 ரூபாவிலிருந்து  3,135 ரூபாவாக அதிகரிக்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்