பேருந்து தடம் புரண்டதால் வீதி போக்குவரத்து தடை..!

  Srilanka News Tamil

பேருந்து தடம் புரண்டதால் வீதி போக்குவரத்து தடை..! Road traffic disrupted due to bus derailment..!


சிவனடி பாத மலைக்கு அம்பலாங்கொடை பகுதியில் இருந்து வந்த பேருந்து ஒன்று தடம் புரண்டதால் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


சிவனடி பாத மலைக்கு அம்பலாங்கொடை பகுதியில் இருந்து வந்த பேருந்து இன்று இரவு தரிசனம் முடித்து விட்டு திரும்புகையில் மவுஸ்சாகலை சந்தியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாயில் சரிந்ததுள்ள நிலையில் அந்த வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.


இதனால் நோட்டன் மஸ்கெலியா அவ் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஒரு வழி பாதையாக நல்லதண்ணி மஸ்கெலியா ஹட்டன் வீதியால் செல்லுமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதனால் பேருந்தில் பயணம் செய்த எவருக்கும் ஆபத்து இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.



பேருந்து அப்புறப்படுத்த பாரந்தூக்கி வரும் வரை அந்த நோட்டன் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஒரு வழி பாதையாக நல்லதண்ணி ஹட்டன் வீதியை பயன்படுத்தும் படி போக்குவரத்து பொலிஸார் கேட்டு கொள்கின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்