வீதி விபத்துகளில் 5 வயது சிறுமி மற்றும் பெண் உட்பட மூவர் பலி!

செய்திகள் #Srilanka

  Srilanka News Tamil

tamil lk news/Three people, including a 5-year-old girl and a woman, died in road accidents!


நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் (Accident) 5 வயது சிறுமி மற்றும் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 


மஹாபாகே, மெல்சிறிபுர மற்றும் பல்லேகலே பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 


மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 


விபத்தில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 


ஏனைய இரண்டு சிறுவர்களும் பலத்த காயமடைந்து றாகம வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


உயிரிழந்தவர் வெலிசர, றாகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியாவார். 


விபத்துக்குப் பிறகு, காரின் ஓட்டுநர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், சாரதியை கைது செய்வதற்காக மஹாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இதேவேளை, கண்டி - பதியதலாவ வீதியில் பலகொல்ல செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது காரொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 


விபத்தில் 76 வயதுடைய பெண் பலத்த காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


இதேவேளை, தம்புள்ளை - குருநாகல் வீதியில் கொஸ்கெலே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 76 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்