தங்க நகைகளை அடகு வைக்க வங்கிகளில் குவியும் பெருந்தொகை மக்கள்

 

Tamil lk news

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஆபத்தான நிதிப்பொறியில் சிக்கியுள்ள பலர் தங்க நகைகளை அதிகளவு அடகுவைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 


இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் கடன்களை நம்பியிருக்க வேண்டியுள்ளதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வருமானம் வீழ்ச்சியே காரணமாக அமைந்துள்ளது.


இந்த ஆண்டு இதுவரை மதிப்பிடப்பட்ட தங்க அடகுக் கடன் ரூ. 365.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.



 இதேவேளை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பால், அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.



 மேலும், கடன் சுமை காரணமாக, மக்கள் பெரும்பாலும் பிரமிட் திட்டங்கள் போன்ற மோசடியான முறையில் பணம் சம்பாதிக்கும் முறைகளைப் பயன்படுத்த தூண்டப்படுவதாகவும், இந்த பிரச்சினை தற்போது இளைஞர்களையும் நேரடியாகப் பாதித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.



இவ்வாறான கடன் நெருக்கடி அதிக மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு முதன்மையான காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்