கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான தகவல்

செய்திகள் #Srilanka

 Srilanka News Tamil 

Tamil lk News/கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான தகவல்/Shooting at Christian church: Information released about the gunman


பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்றையதினம்(18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது அங்கு எவரும் இருக்கவில்லை என்றும், தேவாலயகத்தின் யன்னல்களின் கண்ணாடிகள் மீதே துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இச் சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.



குறித்த தேவாலயத்தின் மத போதகர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்