பசுவால் பறிபோன சிறுவனின் உயிர்!!

Tamil lk News

  விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மாட்டின் கயிற்றில் மாட்டி உயிரிழந்த சம்பவம் ஒன்று அனுராதாபுரத்தில் இடம் பெற்றுள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் 



சிறுவன் வேறு சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​குழப்பமடைந்த பசு அங்கிருந்து வீதியில் ஓடியுள்ளது. 

Tamil lk News

அங்கு, துரதிர்ஷ்டவசமாக குறித்த சிறுவனும் பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, கிட்டத்தட்ட 900 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். 



இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்