உலகின் முதற்தர செஸ் சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர்!

Tamil lk News


  தமிழக வீரர் குகேஷ், உலகின் நம்பர் 1 செஸ் செம்பியனான கார்ல்சனை வீழ்த்தி செஸ் தொடரில் வென்றுள்ளார்.


நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் ‘நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி’ நடைபெற்று வருகிறது.


 இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) உள்ளிட்ட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.



 இந்த போட்டியில் ஒவ்வொரு வீரரும் சக வீரர்களை தலா 2 முறை எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் நார்வே செஸ் தொடரின் 6வது சுற்று ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்செனை, தமிழக வீரர் குகேஷ் எதிர்கொண்டார்.



கார்ல்சன் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற உலகின் நம்பர் 1 வீரர் என்பதாலும், குகேஷ் நடப்பு உலக சாம்பியன் என்பதாலும் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.



 ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாகவும் இருந்த நிலையில், கார்ல்சனை 3-0 என்கிற கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார வெற்றி பெற்றார்.



 முன்னதாக இருவரும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.



இந்த வெற்றியை பதிவு செய்ததன் மூலம் குகேஷ், நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்