போதையில் ஆறு இராணுவ சிப்பாய்கள் செய்த காரியம்....!

 

Tamil lk News

 கொழும்பு, புறக்கோட்டை மிதக்கும் சந்தைப் பகுதிக்கு அருகில் மதுபோதையில் நபரொருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆறு இராணுவ சிப்பாய்கள் புறக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


மருதானை இராணுவ முகாமில் கடமையாற்றும் 29 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு இராணுவ சிப்பாய்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



 நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரே தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



தாக்குதலில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்