பேருந்த மரத்தில் மோதி கோர விபத்து! சிலாபம் – புத்தளம் வீதியில் சம்பவம்

  இலங்கை(Srilanka) போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.


சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

Tamil lk News


இன்று காலை 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



விபத்துக்குள்ளான பேருந்து, பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்தது. 



இந்த விபத்து காரணமாக, சிலாபம் - புத்தளம் வீதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்