65 பேருடன் தீடீரென மூழ்கிய கப்பல் - 4 பேர் உயிரிழப்பு - 23 பேர் மீட்பு!!

  இந்தோனேசியாவின் பாலியில் 65 பேரை ஏற்றிச் சென்ற படகு தீடீரென  மூழ்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 

Tamil lk News


கிழக்கு ஜாவாவின் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேஎம்பி துனு பிரதாமா ஜெயா கப்பல்  தீடீரென மூழ்கியுள்ளது. 




அmதனையடுத்து இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனமான படான் நேஷனல் பென்காரியன் டான் பெர்டோலோங்கன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. 



மீட்பு நடவடிக்கைகளில் நால்வர் உயிரிழந்ததுடன் 23 பேரும் மீட்கப்பட்டனர் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். 




இது தொடர்பில் பன்யுவாங்கி காவல்துறைத் தலைவர் ராம சம்தாமா புத்ரா தெரிவிக்கையில்,  தப்பிப்பிழைத்தவர்களில் பலர் கடலில் பல மணிநேரம் செலவிட்ட பிறகு  மயக்கமடைந்தனர்.- என்றார். 




இதற்கிடையே சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ள இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ,  உடனடி அவசர நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாக அமைச்சரவை செயலாளர் டெடி இந்திரா விஜயா ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அத்துடன் விபத்துக்கான காரணம் "மோசமான வானிலை" என்றும்  தெரிவித்தார். 




சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட  இந்தோனேசியாவில் கடல்சார் பேரழிவுகள் ஒரு பொதுவான நிகழ்வாகும். அங்கு பாதுகாப்பு தரநிலைகள் குறைவாக இருப்பதால், போதுமான உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமல் கப்பல்களை அதிக சுமையுடன் ஏற்றிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்