தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோத கட்டடம்? Jaffna News

 

Tamil lk News-Jaffna News


 சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். 


வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. 


அதன்போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. 


கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று இருந்தனர். 



அதன் போது விகாரை வளாகத்தினுள், கட்டட ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு போன்றதொரு கிடங்கு காணப்பட்டுள்ளது. 

புதிய கட்டடம் 

விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில், புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம்  ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.  


அதேவேளை, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.


இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், 


தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.



தனித்தனி விஜயமாக வந்திருந்த இரு குழுவினரும், விகாரை வளாகத்தில் சந்தித்து, பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Jaffna News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்