டிப்பருடன் மோதிய கார் விபத்து - இருவருக்கு காயம்!

Tamil lk News


  டிப்பருடன் கார் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 




இந்த விபத்துச் சம்பவம் புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் ஆனமடுவ பிரதேசத்தில் இன்று (5)  இடம்பெற்றுள்ளது. 





குறித்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார்,வாகனமொன்றை முந்திச்செல்ல  முற்பட்டபோது பின் பக்கமாக வந்த டிப்பர் மீது கார் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. 




விபத்தில் வாகன சாரதிகள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ   பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்