வத்தளை பகுதியில் பயங்கரம்; கொடூரமாக கொல்லப்பட்ட குடும்பஸ்தர்

Tamil lk News

 

Tamil lk News

 Srilanka News

வத்தளை பொலிஸ் பிரிவின் ஹேகித்த - அல்விஸ்வத்த பகுதியில் வீடொன்றிர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் வத்தளை, ஹேகித்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.



 கொலை செய்யப்பட்டவர், வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில், முகமூடி அணிந்த நால்வர் முச்சக்கர வண்டியில் வந்து, வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


சம்பவத்தின் போது, உயிரிழந்தவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர் என தெரிய வருகிறது.



இந்த நபர், சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.



 பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர்  2023 ஆம் ஆண்டு மஹபாகே பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்