வவுனியாவில் - புதிதாக உருவாகிய மசாஜ் நிலையம்: பொதுமக்கள் எதிர்ப்பு.....!

  வவுனியாவில் (Vavuniya)புதிதாக மசாஜ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


வவுனியா, கண்டிவீதி, தேக்கவத்தை பகுதியில் குறித்த மசாஜ் நிலையம் இன்று (02.07) திறக்கப்பட்டுள்ளது.

Tamil lk News


இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.



 எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளதுடன் குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

(Vavuniya News)



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்