செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 04 என்புத் தொகுதிகள் மீட்பு!!

  

Tamil lk News

யாழ்ப்பாணம் -  செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின்போது இன்றுடன் மொத்தமாக 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 04 என்புத் தொகுதிகள் இன்றைய தினம் மாத்திரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.



அத்தோடு மேலும் 04 என்பு தொகுதிகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராஜா தலைமையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tamil lk News


 குறித்த அகழ்வு பணியில் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.



 மேலும், இதற்கு அருகில் உள்ள இன்னொரு புதிய இடத்திலும் மனித என்புத் தொகுதிகள் இருக்கலாம் என்ற நிலையில் குறித்த பிரதேசமும் அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்