2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை இலங்கையில் 1,274 விபத்துகளில் 1,351 பேர் உயிரிழந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விபத்துகளின் எண்ணிக்கை 108 இனாலும், உயிரிழப்புகள் 129 இனாலும் அதிகரித்துள்ளன.
மொத்தமாக, இந்த ஆண்டின் முதல் பாதியில் 2,600 க்கும் மேற்பட்ட பாரிய விபத்துகளும் 4,642 சிறிய விபத்துகளும், 2,018 சொத்து சேதங்களும் நேர்ந்துள்ளன.
மிகவும் பாரிய விபத்து மே மாதம் இறம்பொடையில் நிகழ்ந்தது.
பயணிகள் பேருந்தொன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, பொலிஸ் திணைக்களம்,விபத்து விசாரணை குழுவை நியமித்து, பொறுப்பில்லாத அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டது.
வீதிப்பாதுகாப்பை மேம்படுத்த, 607 பொலிஸ் பிரிவுகளில் உள்ள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளுர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைக்குழு 779 ஆபத்துள்ள இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றை நிவர்த்தி செய்ய பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.