இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது!!

  பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 நாடு கடத்தப்பட்ட இந்த மூவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

tamil lk news


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33, 34 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவர்கள் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்