சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை; போராட்டத்தில் குதித்த வவுனியாவில் பாடசாலை மாணவன்!

  

Tamil lk news

வவுனியா(vavuniya) - பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச் செய்ததாக தெரிவித்து வலய கல்வி அலுவலகம் முன் இன்று காலை சாத்வீக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.


குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். 



மேலும், பெற்றோரின் சம்மத கடிதமும் பெறப்பட்டிருந்த நிலையில், குறித்த மாணவனை மட்டும் விட்டுச் சென்றுள்ளனர். 

Tamil lk News


இந்நிலையில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன்?  கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படாமை  ஏன்?  எனக்கு உரிய நீதி வேண்டும் என தெரிவித்து மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்