ஆடு கடத்தல் ஜனாதிபதியின் உருவப்படத்துடன் பயணித்த காரில் - சிக்கிய இருவர்

  

Tamil lk News

ஜனாதிபதியின் உருவப்படம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சின்னம் பதிக்கப்பட்ட காரில் இறைச்சிக்காக ஆடு ஒன்றைக் கொண்டு சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

சந்தேகத்துக்கு இடமாகப் பயணித்த காரை வழிமறித்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே இருவரும் குறித்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


News Thumbnail
செம்மணியில் இனப்படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் !


முன்னதாக, இதே போன்ற குற்றச்செயலுக்காக அவர்கள் குறித்த காரை பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்