வடக்கு உட்பட பல மாகாணங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை !

  

Tamil lk News

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வானிலை ஆய்வுமையம்   எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, 



மேற்படி மாகாணங்களிலும் மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றும்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 



மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்