Srilanka News
குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோரையும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவின் காவலில் உள்ள பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோரையும் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.