சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது !

  

Tamil lk News

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


முதலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.



குறித்த படகைச் சோதனையிட்ட கடற்படையினர், அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு, மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.



பின்னர், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கில் அவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்