மேஷம்
இடம் வாங்கி விற்கும் தொழிலில் லாபம் கிட்டும். இறைவன் அருளால் மகிழ்ச்சியும் இன்பமும் குடும்பத்தில் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்
ரிஷபம்
மனதில் நினைத்திருந்த காரியங்கள் வெற்றியாகும். சேமலாபங்கள் கூடும். மனநிம்மதி ஏற்பட்டு குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
மிதுனம்
ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தன லாபங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு சந்தோஷத்தை கொடுக்கும். அரசாங்க அனுகூலம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு
கடகம்
வாகனங்களில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தர்ம சிந்தனைகள் அதிகரித்து கோயிலுக்கு தானம் கொடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
சிம்மம்
எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகி செல்வம் குவியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
கன்னி
திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் நடக்கும். மக்கள் பேறு உண்டாகும். தொழிலில் மேன்மை கிடைக்கும். மகிழத்தக்க நாளாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு
துலாம்
நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும். தொழில் துறைகள் சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு
விருச்சிகம்
ஆடை ஆபரணங்கள் வாங்குகின்ற யோகம் உண்டாகும். தொழிலில் நீங்கள் நினைத்த இடத்தை அடையும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்களால் உங்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை
தனுசு
அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் நாள். புதிய திட்டங்களுக்கு அடி போடுவீர்கள். தொழில் முயற்சிகள் நிறைவேறும். பிள்ளைச் செல்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கரு நீலம்
மகரம்
பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியத்தை நடத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
கும்பம்
தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பூமியோகம் உண்டாகும். கால்நடை வாங்குகின்ற வாய்ப்பு ஏற்படும். சொத்து வளம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள்
மீனம்
பொருளாதார லாபங்கள் அதிகரிக்கும். தீர்த்த யாத்திரைக்கு செல்வீர்கள். இழந்த பொருட்கள் மீண்டும் வந்து சேரும். தொழிலில் வியக்கத்தக்க வகையில் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்