இன்றுவரை 197 ; செம்மணி மனித புதைகுழியில்....!

  செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியில் இன்றும் புதிதாக 10 முழு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.  அதன்படி இன்றுடன் மொத்தமாக 197 மனித எலும்புக்கூடுகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன. 


Tamil lk News



செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 38ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.   




இதன்போது புதிதாக 10 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளங் காணப்பட்டு மீட்கப்பட்டன  என்று சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,




இன்றைய அகழ்வில் 10 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 6 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 



அகழ்வுப் பணிகள்

அத்துடன் இன்று எந்தவொரு சான்றுப்பொருள்களும் அடையாளப்படுத்தப்படவில்லை. மேலும் அகழ்வுப் பணிகள்  நாளை  அரைநாள் இடம்பெறவுள்ளது எனத் தெரிவித்தார்.

Jaffna News

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்